மண்ணை எடுத்துண்டு மண்டலங் காட்டியவன்
வெண்ணெய் எடுத்துண்ண வீட்டுக்குள் வந்தானோ?
காதலாள் கைவண்னம் கண்ணனின் கால்வண்ணம்
பாதச் சுவடுகள் பார்
மாக்கோலம் போட்டு மனையழகு காட்டிட
மாக்கோல மீதில் மகன்னடந்து வந்ததால்
கால்கோலம் போட்டது கண்டீரோ?- பூக்கோலப்
பாதச் சுவடுகள் பார்
எங்கே கதிரெழுமோ ? யாரை அதுதொழுமோ?
இங்கே விளம்பென்றால் யான்சொல்வேன் - செங்கதிர்
மா,தவம் செய்ய வலம்வருமே தென்குமரி
பாதச் சுவடுகள் பார்த்து.