Sunday, February 22, 2015

தமிழ் தமிழ் தமிழ்













தமிழ் தமிழ் தமிழெனக் கூறும்-அது 
அமிழ்தமிழ் தமிழ்தென மாறும் 
அமிழ்துடன் உமைவர நாளும் 
அழைத்தென் தமிழ்மொழி ஆகும் 
பரணியை எழுதிட தாயும் 
பந்தமும் பிடித்திடத் தூண்டும் 
தரணியில் அமாவசை நாளும் 
தமிழ்தர முழுமதி தோன்றும் 
அரவணை சுருட்டி நம் மாலும் 
அலைந்தது தமிழ்மொழிக் காகும் 
பரவையின் மனைக்கிறை தூதும் 
பயின்றது தமிழ் உணர் வாகும் 
சூளையும் பொய்கை என்றாகும் 
சூளைநோய் தீர்ந்துபொய் யாகும் 
ஆளையும் கொடையையும் பாடும் 
ஆற்றுப்படையெனும்பாடம் 
சந்தமும் திருப்புகழ் பாடும் 
சகலமும் திருக்குறள் ஓதும் 
நந்தியின் களம்புகும் வீரம் 
நந்திக் களம்பகம் பாரும் 
விழும் மழை பொழிவதைப்பாடும் 
விரிதிருப் பாவை விஞ்ஞானம் 
கழுமரம் எரிந்திடச் சீறும் 
கனல்மொழி தமிழ்மொழி வேதம் 

நெஞ்சம் மறப்பதில்லை
















நெஞ்சம் மறப்பதில்லை-தன்
நினைவை இழப்பதில்லை
நாம் கேட்டிருப்போம் இன்றும் கேட்டிருப்போம்
காதுக்கு மூடி இல்லை -எந்த
காதுக்கும் மூடி இல்லை (நெஞ்சம்)
காலங்கள் தோறும் உன்கவி பாடி
களிக்கும் தமிழ் மனமே
வரும் காற்றினிலும் அந்த பாட்டினிலும் என்றும்
காண்பது உன் மனமே-என்றும்
காண்பது உன் மனமே (நெஞ்சம்)
பட்டிணத் தாரின் தத்துவ மெல்லாம்
யாருக்கும் புரிய வில்லை
அதை பதவுரை யாக பாட்டினில் தந்தாய்
யாரும் மறக்க வில்லை-அதை
யாரும் மறக்க வில்லை(நெஞ்சம்)
நினைப்பது எல்லாம் நடந்துவிட்டாலோ
தெய்வம் ஏது மில்லை-அதை
மனதினில் பதித்தாய் ஆன்மீகம் தந்தாய்
மறுப்பவர் யாரும் இல்லை-கடவுளை
மறுப்பவர் யாரும் இல்லை(நெஞ்சம்)
நினைக்கத் தெரிந்த மனங்களுக் கெல்லம்
மறக்க தெரிய வில்லை
நீ நிரந்தர மானவன் உன் நிரந்தர மாணவன்
குரல் ஏன் கேட்கவில்லை-உனக்கென்
குரல் ஏன் கேட்க வில்லை(நெஞ்சம்)