Monday, March 31, 2025

திரு எழுகூற்றிருக்கை




தமிழ் 

 ஒன்றே அமிழ்தாம் ஒண்டமி ழென்போம்..... 1 ஒருதனிக் குணத்தாள் அகம்புறம் என்னும் இருதிறம் காட்டும் இயல்பொன் றுடையாள் – 121 
 ஒருசொல் இருபொருள் உவந்தேயளிக்கும் முத்தமிழாளே இரட்டுறமொழிதலாய் ஒன்றுமற் றொன்றாய் ஒற்றுப்பெயர்ப்பாய்-12321

 ஒருமாத்திரைகுறில் இருமாத்திரைநெடில் வரும்முப் பொழுதும் தரும்எழுத்து அளப்பாய் நாற்றிசை போற்றும் முந்நீர் ஏத்த இருநிலம் வாழ்த்தும் இளையவள் ஒருத்திநீ – 1234321

 ஒன்றுதொல் காப்பியம் உரைக்கும் இலக்கணம் இரண்டுகாப்பியங்கள் இலக்கியங்கள் முத்தொள் ளாயிரம் நாலடி யாரும் ஐந்திணைகளோடும் நாற்கவி யருளி முக்கடுகத்தால் இருபிணி அகற்றி எக்காலும் காக்கும் எண்ணமொன் றுடையாள்_123454321 

 ஒருதிருக் குறளால் ஈரடி யிட்டு முப்பால் பொழிந்தாய் நால்வகைப் பொருள்கொள ஐவகை நிலங்களோ(டு) அறுபெரும் பொழுதளந்தாய் ஐவகை கருப்பொருள் நால்வகை உரைகளை முந்நூல் ஆக மொழிந்திட வைத்தே இரண்டு படாமல் ஒன்று படுத்துவாய் – 12345654321

 ஓரசை நேர்நாள் ஈரசை நிரைமலர் மூவசை காய்கனி நாலசை சீர்களோ(டு) ஐந்திலக் கணத்தாள் ஆறிலக் கணம்பெற்றாள் ஏழிசை இசைப்பாய் ஆறறி வளந்தாய் ஐம்புலன் காப்பாய் நால்வகைப் பாக்கள்தா அம்மா முச்சங்க அரசியே உன்னை இருகைகள் வணங்க மனமொரு மித்தேனே – 1234567654321 

 ஒருதனிச் சிறப்பு ழகரம் உடையாய் இருகண்புகுவாள் மூவினம் கொண்டாள் நால்வகைச் சொல்பெற்றாள் ஐங்குறு நூறுடன் அறுபடை கொண்டாள் எழுகூற் றிருக்கைபா ஆறென் றமர்வாய் அஞ்சுதந் திரம்கண்டாய் நாநாற் பதுதந்தாய் முக்கனிச் சாறாய் இருமையும் இருப்பாய் எக்காலும் தொழுவேன் இதயம் ஒன்றியே. I234567654321